மராட்டிய மாநிலத்தில் உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் விதமாக, திருமணமான பெண் ஒருவர் தனது சொந்த மருமகனுடன் (கணவரின் அக்கா அல்லது தங்கை மகன்) கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு அவருடன் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் தனது வீட்டில் அடிக்கடி வந்து செல்லும் பேச்சிலர் மருமகனுடன் ரகசியமாகப் பழகி வந்துள்ளார். இது குறித்துத் துளியும் சந்தேகம் அடையாத கணவர், தனது மருமகனைச் சொந்தப் பிள்ளை போலவே கருதி வந்துள்ளார்.
சம்பவத்தன்று, அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமியின் பாதங்களைத் தொட்டு கும்பிட்டுவிட்டு வருவதாகக் கணவனிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.
அதனை நம்பிய கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், கோவிலுக்குச் சென்ற அந்தப் பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த கணவர் பல இடங்களில் தேடியபோதுதான், தனது மனைவி தனது சொந்த மருமகனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
தான் வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது போல, தான் நம்பிய மருமகனே தனது வாழ்க்கையைச் சீரழித்துவிட்டதை எண்ணிக் கணவன் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இது குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
