சேலம் மாவட்டம் பேளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவர், முன்னாள் மாணவியொருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், ஆசிரியர்கள் தினகரன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி மனஅழுத்தம் ஏற்படுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தினகரன் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்போது பயின்றுவரும் மாணவிகள் யாரேனும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.