அமெரிக்காவின் கலிபோர்னியாவில், சொகுசு கார்களைச் சேதப்படுத்தி காப்பீட்டுப் பணத்தைச் சுருட்ட முயன்ற ஒரு விசித்திரமான மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது.

‘ஆபரேஷன் பியர் க்ளா’ என்ற பெயரில் நடந்த விசாரணையில், கரடி வேடமிட்ட ஒரு நபரை ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மெர்சிடிஸ் போன்ற விலை உயர்ந்த கார்களுக்குள் அனுப்பி, இருக்கைகளைக் கிழித்துச் சேதப்படுத்தியது அம்பலமானது.

காருக்குள் புகுந்த கரடி ஒன்று உட்புறத்தைச் சிதைத்துவிட்டதாகக் கூறி, சுமார் 1.2 கோடி ரூபாய் (142,000 டாலர்) இழப்பீடு கோரி இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது. நிபுணர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கரடி போல நடித்தது ஒரு மனிதர் என்பதும், இறைச்சி வெட்டும் கத்திகளைக் கொண்டு விலங்கு கீறியது போன்ற அடையாளங்களை அவர்கள் உருவாக்கியதும் உறுதியானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அல்ஃபியா சக்கர்மேன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் 180 நாட்கள் சிறைத் தண்டனையும், இரண்டு ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பும் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பல லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திரைப்படப் பாணியில் கரடி வேடமிட்டுத் திட்டமிட்டாலும், நவீனத் தொழில்நுட்பமும் அதிகாரிகளின் விழிப்புணர்வும் இந்தக் கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ABC News Live (@abcnewslive)

“>

எவ்வளவு சாமர்த்தியமாகத் திருடினாலும் ஒருநாள் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதற்கு இந்த ‘கரடி வேட’ மோசடி வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.