அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து புளோரிடா மாநிலத்திலுள்ள சரசோட்டாவை நோக்கி சென்ற ஜெட் ப்ளூ விமானத்தில், 43 வயதான டிரிஸ்டா எல். ரெய்லி மற்றும் 42 வயதான கிறிஸ்டோபர் ட்ரூ அர்னால்ட் ஆகியோர் தங்கள் இருக்கையில் உடலுறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, விமானத்தில் இருந்த இரண்டு சிறு குழந்தைகளால் முதலில் பார்த்துள்ளனர் பின்னர் , அவர்கள் தங்கள் தாயிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் தாய் இந்த தகவலை விமான பணிப்பெண்ணிடம் தெரிவித்தார். விமான ஊழியர்கள் உடனடியாக அந்த தம்பதியரிடம் சென்று பார்த்தபோது, அவர்கள் சற்றும் கூச்சமின்றி சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. சுட்டிக்காட்டப்பட்டபோதும், தம்பதியர் தங்கள் செயலையை நிறுத்தவில்லை எனவும், குழந்தைகள் நேரில் பார்த்தும் அவர்கள் வெட்கம் கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விமானம் சரசோட்டா – பிராடென்டன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ரெய்லி மற்றும் அர்னால்ட் ஆகியோர் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளும் தங்கள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வானூர்தி பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலர் பயணிக்கும் விமானத்தில் இப்படியொரு செயலுக்கு இடமளித்தது எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
