ஹரியானா மாநிலத்தின் நுஹ் மாவட்டம் புன்ஹானா நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ்தல்லா கிராமத்தைச் சேர்ந்த ராம் கிஷன் என்பவரது குடும்பத்தில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது 17 வயது மகன் கன்ஹையா, தனது வளர்ப்பு தாயை காதலித்து திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார். கடந்த 3 மாதங்களாக காவல்துறையிடம் முறையிட்டு வருகிறேன், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

ராம் கிஷன், தனது முதல் மனைவியை இழந்தபின் சோஹ்னா பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது முதல் மனைவியால் பெற்ற மகன் கன்ஹையா, தன்னையும் புதிய மனைவியையும் தேடி வந்துள்ளார். முதல் பல மாதங்கள் அவர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்ந்தபோதிலும், திடீரென அந்த மகனுக்கும் மாற்றாந்தாயுக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக ராம் கிஷன் கூறுகிறார். இதைத் தொடர்ந்து இருவரும் வீட்டௌ விட்டு ஓடினர். தனது மகன் தினமும் மனைவியின் கால்களைத் தொட்டு ஆசிபெற்றதாகவும், எப்படி ஒரு தாயின் மீது மகனுக்கு காதல் வந்தது என்று தனக்கு தெரியவில்லை எனவும் தந்தை வேதனையுடன் கூறியுள்ளார்.

மகனுக்கும் மனைவிக்கும் இடையே நடைபெற்ற இந்த சம்பவம் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ராம் கிஷனின் கூற்றுப்படி, அவரது மகன் சட்டபூர்வமாக திருமணம் செய்யும் வயதான 18-ஐ எட்டவில்லை; எனவே நீதிமன்ற திருமணத்திற்கும் உரிமை இல்லை. ஆனால், காவல்துறை இருவருக்கும் திருமணமாகிவிட்டதாக கூறி நடவடிக்கையை தவிர்த்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். தற்போது, எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை என்ற வேதனையுடன், முதலமைச்சரிடம் நேரடியாக புகார் அளித்து தனது மகனை மீட்டுத் தரவும், மாற்றாந்தாயின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சோகமான சம்பவம் சமூகத்தின் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.