கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பெங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது என்னுடைய சட்டையை கழற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அப்போது ஒரு உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு நான் பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்றது அவமதிப்பிற்கும், வேதனைக்கும் ஆளாக்கியது. ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்ற செய்ய வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் பரவியவுடன் பெங்களூர் விமான நிலையம் சார்பாக மன்னிப்பு கேட்கப்பட்டது. மேலும் இந்த தவறு நடைபெற்றிருக்கக் கூடாது. இது எங்களது செயல் குழுவினருக்கு கூறியுள்ளோம். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவனித்து வரும் பாதுகாப்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.