
இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை 82 பேர் பட்டாசு வெடித்ததில் தீக்காயம் அடைந்ததாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
அதோடு ஒரு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர பட்டாசு அல்லது வேறு காரணங்களால் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.