
சமீபகாலமாகவே சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து 60 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவிற்கு 60 பயணிகள் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த பேருந்தை ஷேக் அக்தர் என்பவர் ஒட்டி வந்துள்ளார். ஒடிசாவில் பாலசோர் அருகே வந்தபோது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பயணிகளை காப்பாற்ற எண்ணிய அவர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு உயிரை விட்டுள்ளார்.