திருமணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில், காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி சுடுகாட்டில் தாலி கட்டித் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த மணமகன் மற்றும் மணமகள், தங்களது திருமண நிகழ்வு வழக்கத்திற்கு மாறாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காகப் பலரும் தவிர்க்கும் ஒரு இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுடுகாட்டைத் திருமணத் தலமாக அவர்கள் அறிவித்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Bharat Post (@thebharatpost_)

நிச்சயித்தபடி, அந்தச் சுடுகாட்டின் நடுவே வேள்வி வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் முழங்க மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இந்தத் திருமணத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சுடுகாட்டின் சூழலில், பிணங்களை எரிக்கும் இடத்திற்கு அருகிலேயே விருந்தினர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கை என்பது பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடைப்பட்டது என்பதை இந்தத் திருமணம் உணர்த்துகிறத” எனச் சிலர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் திருமணம் என்பது மங்கலகரமான நிகழ்வு; அதை அமங்கலமான இடத்தில் நடத்துவது முறையல்ல” எனச் சிலர் விமர்சித்துள்ளனர். மேலும் எது எப்படியோ, காசியாபாத் ஜோடியின் இந்த ‘சுடுகாட்டுத் திருமணம்’ தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.