மத்தியபிரதேச மாநிலத்தில் திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிந்த்வாரா பகுதியில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் விமரிசையாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணமகன் மேடையில் காத்துக்கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக மணப்பெண் திடீரென மேடையிலிருந்து கீழே குதித்து, கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த தனது காதலன் கழுத்தில் மாலையை அணிவித்தார். இந்தச் செயலால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரைத் தாக்கத் தொடங்கியதால், திருமண மண்டபமே போர்க்களமாக மாறியது.

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)

“>

இதனால் விசாரணையில், அந்தப் பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வாலிபரைக் காதலித்து வந்ததும், குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததும் தெரியவந்துள்ளது. இந்த எதிர்பாராத திருப்பத்தைத் தொடர்ந்து, அவமரியாதை அடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், கட்டாயத் திருமணங்கள் இது போன்ற விபரீத விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.