ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரக்கூடிய ‘வேட்டையன்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி தான் காரணம் என கூறப்பட்டுள்ளது.

இரண்டு படங்களையும் லைக்காநிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் வேட்டையன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் மூலம் வரும் ஓடிடி சேட்டிலைட் வருவாயை விடாமுயற்சி படத்திற்கு பயன்படுத்தலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.