ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் கதாநாயகனின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்து வந்த நடிகை தர்ஷு சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்து வந்த வீரா கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன ரியாலிட்டி ஷோவான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி இருக்கும் கௌரி இனி வீராவாக நடிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது.