ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக எம்.எஸ் தோனி விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் எம்.எஸ் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் சென்னை அணி நிர்வாகம் எம்.எஸ். தோனி தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்து தங்களிடம் எதுவும் சொல்லவில்லை என கூறியுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற வாய்ப்பு கிடையாது என்று சிலர் கூறுகிறார்கள். இந்நிலையில் எம்.எஸ் தோனி தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டன் செல்ல இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆப்ரேஷனுக்கு பிறகு அவர் பரிபூரணமாக குணமடைய 5 முதல் 6 மாதங்கள் ஆகும். மேலும் அதற்குப் பிறகு தோனி தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து யோசித்து முடிவெடுப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.