
சிவகங்கை முதுகுப்பட்டி தச்சம்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏழுமலையான் பைனான்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டனர். பின்னர் துளை வழியாக கடைக்குள் சென்று நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மறுநாள் காலை கடைக்கு சென்ற பாண்டிதுரை நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாண்டித்துரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.