உத்தர் பிரதேஷ் மாநிலம் பந்தா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் ஸ்கார்பியோ காரை வரதட்சணையாக கேட்டு கிடைக்காத நிலையில் முத்தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில் “தங்களுக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது தனது தந்தை 15 லட்சம் சீர் செய்தார். திருமணம் முடிந்தது முதல் தனது கணவன் வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர். குறிப்பாக ஸ்கார்பியோ கார் கேட்டு தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர்.

இதனால் தாய் வீட்டில் இருந்த என்னை சமீபத்தில் பார்க்க வந்த கணவர் மீண்டும் ஸ்கார்பியோ கார் வேண்டும் என கேட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் முத்தலாக் கூறிவிட்டார்” என புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.