சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் உள்ள சாலையில் 3 மாத கரு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் கிடந்த 3 மாத கருவை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சாலையில் 3 மாத கருவை வீசி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.