சென்னை மாவட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15- க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். அந்த நிறுவனத்தில் ராஜராஜன் என்பவர் மேலாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜராஜனை கைது செய்தனர். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.