சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கூலித்தொழிலாளியான சேகர் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் சம்பவத்தன்று சேகர் தனது வீட்டுக்குள் பார்வதியுடன் இருந்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய சேகரின் மனைவி சந்திரா வீட்டுக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தன்னுடைய கொழுந்தனார் தனசேகரனை அழைத்து இருவரும் வீட்டுக் கதவை தட்டினர். வீட்டுக்குள் இருந்து சேகர் அவருடைய கள்ளக்காதலையுடன் வெளியே வந்த நிலையில் இதனை கண்டு சந்திராவும் தனசேகரனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இருவரும் சேகரை கண்டித்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சேகர் மனைவி மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தனசேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து சேகர் மற்றும் கள்ளக்காதலி பார்வதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.