வெளிநாடுகளில் சென்று பணிபுரிவதும், குடும்பத்துடன் குடியேறுவதும் பலரின் பெருங்கனவாக இருக்கும் அதே வேளையில், அங்குள்ள வாழ்க்கைச் செலவுகள் பல நேரங்களில் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, ஆசிய நாடுகளிலிருந்து வேலைக்காகத் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்திற்குச் செல்பவர்களுக்கு, அங்குள்ள கல்விச் செலவு என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், துபாயில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள பள்ளிகளில் தனது குழந்தையைப் படிக்க வைப்பதற்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த முழு விவரங்களையும் ஒரு வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாயில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியில் சேர்க்கைக் கட்டணம், ஆண்டுப் பள்ளிக் கட்டணம், சீருடை, புத்தகங்கள், பேருந்துக் கட்டணம் மற்றும் பிற உபரிச் செயல்பாடுகளுக்கான செலவுகள் என அனைத்துப் பட்டியலையும் விரிவாக உடைத்துப் பேசியுள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு குழந்தைக்குச் சராசரியாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய்களைக் கல்விக்காக மட்டுமே செலவழிக்க வேண்டியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு இந்தச் செலவு எவ்வளவு பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்பதை அவர் அந்த வீடியோவில் மிகத் தெளிவாக விவரித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் வசிக்க ஆசைப்படும் பலரும் இந்தத் தகவலைக் கண்டு பெரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். “வெளியிலிருந்து பார்க்கும்போது துபாய் வாழ்க்கை வண்ணமயமாகத் தெரிந்தாலும், குடும்பத்தோடு வாழும்போது இதுபோன்ற மறைமுகச் செலவுகள் தான் பாக்கெட்டைக் காலி செய்துவிடுகின்றன எனப் பல நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

“>