இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் அவ்வப்போது பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

அவ்வகையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி தற்போது சூப்பர் குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக 9 புள்ளி 15 சதவீதம். தற்போது எஸ்பிஐ வங்கி அதில் சலுகை தர முடிவு செய்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் 8. 70% இருந்து வீட்டு கடன் பெறலாம் என அறிவித்துள்ளது.