மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே முத்தையம்பட்டி என்ற கிராமத்தில் பெருமாள் மனைவி பஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். பெருமாளுக்கு 48 வயதில் பாண்டியன் என்ற ஒரு தம்பி உள்ளார். இந்த நிலையில் பெருமாளுக்கும் அவருடைய தம்பி பாண்டியனுக்கும் இட பிரச்சனை இருந்து வந்துள்ளது. நேற்று காலை பெருமாள் வழக்கம் போல வேலைக்குச் சென்ற நிலையில் அவருடைய மனைவியை பஞ்சம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது பாண்டியன் வீட்டின் முன்பு இருந்த கல்லை தனது வீட்டின் முன்பு பஞ்சம்மாள் எடுத்துப் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் கட்டையால் தாக்கியதில் பஞ்சம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.