தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக பல கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் உமா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நம்முடைய அரசு பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்றால் இத்தனை அரசு அதிகாரிகள் இருந்து என்ன பயன்? அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது தான் இதற்கு காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
