இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை செலுத்தப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பி எம் கே சாங் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கை வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும். வங்கி கணக்கில் பணத்தை பெற இ கேஒய்சி கட்டாயம். அதனால் KYCயை புதுப்பிக்க வேண்டும்.