இந்தியாவில் காற்று மாசு அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதம் வரை குறைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர் பூவேந்தர் யாதவ் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் காற்று மாசு அளவு 45 சதவீத வரை குறைக்கப்படும் என தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்குள் காற்று மாசு பூஜ்ஜியம் என்ற அளவை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டிலும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எரிபொருள், பசுமை எரிசக்தி, பசுமை பாதுகாப்பு கட்டிடங்கள், பசுமை போக்குவரத்து, பசுமையை பாதுகாக்கும் உபகரணங்கள் போன்ற பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.