காஞ்சிபுரம் விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் சேக்காடு மேட்டு தெருவில் சேர்ந்த வேலு என்பவர் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி தனசேகரன் 17 லட்ச ரூபாய் வரை வேலுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டார்.

இது தொடர்பாக தனசேகரன் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வேலு 8 பேரிடம் 62 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த வேலுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.