தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் கடந்த 13ஆம் தேதி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஹாரன் ஒலி எழுப்பியபடியே வந்து கொண்டிருந்தது. அனால் சேரனின் கார் வழிவிட்டு ஒதுங்கி செல்ல இயலவில்லை. இருப்பினும் தொடர்ந்து அந்த பேருந்தின் ஓட்டுநர் ஹாரன் ஒலி எழுப்பி வந்துள்ளார். இதனால் கோபமடைந்து சேரன் நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி அந்த ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது, கடலூர் புதுச்சேரி சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் நேரத்தை வைத்து இயங்கி வருகிறது. அதாவது ஒரு பேருந்து நிலையத்திலிருந்து இன்னொரு பேருந்து நிலையத்தில் செல்வதற்கு போட்டி தான் என்று கூறியுள்ளனர். இதனால் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை ஒதுங்கி செல்லவும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஹாரன் ஒலியை பயன்படுத்துவதுமாக இருக்கிறது. மேலும் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.