திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எனக்கு விஜய்யும் பிடிக்கும் அஜித்தும் பிடிக்கும். அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. தனிமனிதன் சினிமா துறையில் எவ்வித பின்புறமும் இல்லாமல் சாதனை செய்துள்ளது சாதாரண விஷயம் கிடையாது. விஜய் முதல் படம் பார்த்துள்ளேன். இப்போது விஜய் நடிப்பில் மிரட்டி வருகிறார். அவர் அசாத்தியமான டான்ஸர். இரண்டு படத்தையும் நான் பார்ப்பேன். நேரம் கிடைக்கும் போது இரண்டு படத்தையும் பார்ப்பேன். ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.