நடிகர் கார்த்திக் தற்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு சந்தோஷம்தான். நடிப்பை முழுமையாக விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார்.

மக்களும் அவரை விரும்புகின்றனர். ஆனால் அவர் நடிப்பதை கைவிடக்கூடாது. தொடர்ந்து படங்களின் நடிக்க வேண்டும். அப்போதுதான் தனது கருத்துக்களை படத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துக்கூற முடியும் என தெரிவித்துள்ளார். தளபதி 69 படத்திற்கு பின் நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.