தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் தணிக்கை வாரியம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான தணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் பெரியோர் மேற்பார்வையில் சிறியோர் பார்க்கக்கூடிய U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.