அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நேற்று வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இரு தரப்பு ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை வைத்தும், அடிதடி, ரகளையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில் விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து ஒட்டி இருக்கும் போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், வாரிசு, துணிவு-னு அடிச்சுக்காம, துணிவோடு வாரிசை கொண்டாடுங்க நண்பா..! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.