நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் மாதம் தனது காதலர் சோஹைல் கதூரியாவை ஜெய்ப்பூரில் இருக்கும் 450 ஆண்டுகள் பழமையான முண்டோட்டா அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். முதலில் ஜெர்மனி, பாரிஸ் போன்ற நாடுகளுக்கு சென்று ஹன்சிகா கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் ஹன்சிகா எகிப்து நாட்டுக்கு சென்று பிரமிடு மற்றும் ஒட்டகங்களின் மேல் அமர்ந்தபடி தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.