உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மிட்டாய் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாயில் ஒரே நேரத்தில் பல whatsapp அக்கவுண்டுகளை பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வெளிவர உள்ளது. ஆனால் இந்த மல்டி அக்கவுண்ட் அம்சம் பிசினஸ் வாட்ஸ் அப்பிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் whatsapp செயலியில் இருந்து வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேரிங் முறையையும் கூடிய விரைவில் whatsapp நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது கூகுள் மீட் உள்ளிட்ட செயலியில் மட்டுமே இந்த அம்சம் இருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலிலும் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தற்போது whatsapp கம்யூனிட்டி பிரிவில் சில ஷார்ட் கட்டுகளை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக அப்டேட் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக கம்யூனிட்டி அட்மின் எவ்வித தகவலையும் தெரிவிக்காமலேயே கம்யூனிட்டியில் ஒரு புதிய குழுவை இணைக்க முடியும். இன்னும் சில வாரங்களில் இந்த புதிய அப்டேட் வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.