BSNL தன் பயனாளர்களுக்கு கூடுதல் குடும்ப இணைப்புகள் உடன் வரும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டங்கள் செயல்படுத்தும் கட்டணம் ரூ.100 மற்றும் புது பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு பாதுகாப்பான வைப்பு கட்டணங்கள், உள்ளூர்+STD போஸ்ட் பெய்டு இணைப்பிற்கு ரூ.500 ஆகும். அதோடு உள்ளூர்+STD+ISD போஸ்ட்பெய்ட் இணைப்புக்கு ரூ.2000 மற்றும் உள்ளூர்+STD+ISD+சர்வதேச ரோமிங் போஸ்ட்பெய்டு இணைப்புக்கு ரூ.5,000 வசூலிக்கப்படுகிறது.

இதையடுத்து ரூ.525 BSNL போஸ்ட்பெய்ட் திட்டமானது இலவச வரம்பற்ற அழைப்பு, 255 GP வரை டேட்டா ரோல் ஓவருடன் 85 GP டேட்டா மற்றும் தினசரி 100 SMS போன்றவற்றை வழங்குகிறது. இது வரம்பற்ற குரலழைப்பு, 10 GP டேட்டா மற்றும் தினசரி 20 SMS உடன் ஒரு கூடுதல் குடும்ப சிம்மை வழங்குகிறது.

அதேபோல் BSNL ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் 150 GP வரை டேட்டா ரோல் ஓவருடன் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது நாளொன்றுக்கு 100 SMS மற்றும் வரம்பற்ற குரலழைப்புடன் வருகிறது. பயனர்கள் அன்லிமிடெட் குரல் வசதியுடன் கூடிய 2 குடும்ப சிம்கள், 50 GP டேட்டா மற்றும் ஒவ்வொரு குடும்ப இணைப்புக்கும் தனித் தனியாக நாளொன்றுக்கு 100 SMS-களை பெறுகின்றனர்.