தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை தேர்தல் துறையின் இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்கு இணையதளம் மூலமாகவும் கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குதல் உள்ளிட்ட கேள்விகள் மற்றும் விவரங்களை பெறுவதற்கு 1950 என்ற மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அதேசமயம் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் உள்ள 180042521950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.