சென்னையில் மக்கள் அதிக அளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால் அங்கு முக்கியசாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் உள்ளது. இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் மாற்று சாலைகளில் வாகனங்களை மாற்றி விடுவார்கள். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மாநகராட்சி live trafic monitor சிஸ்டம் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக போக்குவரத்து நெரிசலை தொழில்நுட்ப ரீதியாக நேரலையில் இருந்து கையாள முடிகிறது. மேலும் அவசர கால தேவைகளின் போதும் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மாற்றுப்பாதை குறித்த ஏற்பாடுகளை செய்ய முடியும். அதிலும் குறிப்பாக ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நகரில் டிராபிக் நிலவரத்தை அறிவிக்கின்றது. இதன் மூலமாக டிராபிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பிற்கால தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் மூலமாக அதிக டிராபிக் ஆன சாலைகள் மாற்றுப்பாதை அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை போலவே பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் முக்கிய 300 இடங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த லைவ் டிராபிக் மானிட்டர் சிஸ்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.