உத்தரபிரதேசம் வாரணாசியிலிருந்து வங்க தேசம் வழியே அசாம் திப்ருகர் வரை போகும் சொகுசு கப்பலானது சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கங்கா விலாஸ்” எனப்படும் சொகுசு கப்பல் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த உல்லாசமான பயணத்தில் 50க்கும் அதிகமான சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல நதிகள் வழியே இந்த கப்பல் செல்கிறது.

உலகின் மிக ப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ஆம் தேதி அன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்குரிய பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் மற்றும் மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ்சர்மா போன்றோர் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.