மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர். அந்தப் பெண் வரதட்சணை வாங்கி வர மறுப்பு தெரிவித்ததால் இயற்கைக்கு மாறான உறவுக்கு அந்த பெண்ணை கணவர் வற்புறுத்தியுள்ளார்.

அதற்குப் பெண் சம்மதிக்காததால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். தனக்கு நடந்த கொடுமைகளை பெண் தன்னுடைய பெற்றோரிடம் கூற அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலீசாருக்கு பயந்து பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கும் பெண்ணின் கணவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.