இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் வியப்பில் ஆழ்த்தும். அதன்படி தற்போது ஒரு பாட்டி முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல என்று நிரூபித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் தலைகீழாக குதித்து அசத்திய பாட்டியின் காணொளியை ஐஏஎஸ் அதிகாரி தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த பலரும் கருத்துக்களை பதிவிட்டு பாட்டியின் வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.