நாட்டின் நீண்ட தூர பயணத்திற்கும், பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்த காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், தென்னக ரயில்வே பொது மேலாளரை இன்று சென்னையில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, மீண்டும் சந்தித்து வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை விடுத்தார். அவரும் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்