தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்குவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழக முழுதும் டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக  சுகாதார இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவுகிறது.

மருத்துவர்கள் அனைவரும் தங்களிடம் சிகிச்சை வரும் நபர்களுக்கு டெங்கு அறிகுறிகள் ஏதேனும் பட்டால் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் விதமாக செயல்படு வோர் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.