நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நீட் தகுதி தேர்வு அடிப்படையில் கொண்டு நடத்தப்படுகிறது. 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மேலும் நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தான் நடத்தப்படுகிறது. இதனால் மாநில கல்வி பாரியத்தின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பது சிரமமான காரியமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு நடப்பாண்டி நீட் தேர்வில் கலந்து  கொண்டாலே கலந்தாய்வுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில்  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  ,மா.சுப்பிரமணியன், நீட் தகுதி தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசை ஒப்புக்கொள்ள தொடங்கிவிட்டது. இதனால் சட்டபூர்வமாக இளநிலை முதுநிலை நீட் தேர்வுகளுக்கான  விலக்கு  கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.