தமிழகத்தில் நிலம்,  வீட்டு வாடகை மற்றும் வீடுகளை குத்தகை விடுவதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக கடந்த 2019 ஆம் வருடம் புதிய சட்டம் இயற்றப்பட்டது .ஆனால் பொதுமக்கள் இந்த சட்டம் குறித்து அறியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதாவது வாடகை வீட்டின் ஒப்பந்த பதிவு மற்றும் ஒப்பந்த பதிவு தொடர்பான புகார்களை தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஆணையங்கள் செயல்பட்டு வருகிறது. வீட்டு வாடகை மற்றும்  குத்தகை விவரங்களை  சேகரி ப்பதற்கு ஆணையங்க கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஏதேனும் வாடகை வீட்டின் ஒப்பந்த பதிவு மற்றும் ஒப்பந்த பதிவு தொடர்பான புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றால் இங்கு சென்று நேரில் முறையிடலாம் எனவும் அறிவி க்கப்பட்டது.

இந்த ஆணையம் எந்தெந்த பகுதிகளில் அமைந்துள்ளது எனவும் தொடர்பு எண்கள் வெளியிட்ட விவரங்களும்  www.tenancy.tn.gov.in/  என்ற இணையத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவரங்களை அறிந்து புகார்களை தெரிவிக்கலாம் என்று வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை  தெரிவித்துள்ளது/.