தமிழக அரசால் தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக அரசின் மகளிர் உரிமை திட்டத்தில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மகளிர் தொகை திட்டம் திமுக அரசின் குளறுபடியின் மொத்த வடிவமாக உள்ளது.  நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த சூழலில் அரசு சார்பில் ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது.

அதில் ஒரு கோடி 60 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 60 லட்சம் மக்கள் தள்ளுபடி செய்ததாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களுக்கு வங்கி மூலமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் மக்களை தள்ளுபடி செய்ததாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் நான் விண்ணப்பிக்கவில்லை.

ஆனால் எனக்கே தள்ளுபடி செய்ததாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் கலைஞர் மகளிர் திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை என்று அனுப்பப்பட்டுள்ளது. எனவே தகுதியை அரசே நிர்ணயித்து தள்ளுபடி செய்து அதை திரும்பியும் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்வதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். எனவே குளறுபடியும் மொத்த அடையாளமாக இது இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.