பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக வேன் ஒன்று பணத்துடன் சென்று கொண்டிருந்தது. 1.71 கோடி ரூபாய் பணத்துடன் சென்று கொண்டிருந்த அந்த வேன் வங்கிக்கு வராமல் இருந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்ததில் வேன் ஓட்டுநர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார் என தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றவர் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.