பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும்  போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.