ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடுமையான மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பொது இடத்தில் சரியாக உடை அணையாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தண்டனை சட்டப்படி 150 மில்லியனில் இருந்து 360 மில்லியன் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்க படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் சிறுமிகள் அவர்களது தலைமுடி வெளியில் தெரியாத அளவிற்கு ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும். மேலும் தளர்வான நீண்ட ஆடைகளை அணிந்து உடலை மறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தகாத முறையில் ஹிஜாப் அணிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்  மாஷா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து போராட்டம் வெடித்து ஒரு வருடம் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.