ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெரிய சேமூர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் அழகர்சாமியின் மகள் மாரியம்மாளிடம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். இந்த நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பிறகும் பாலுவுக்கு சேர வேண்டிய 7 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொடுக்காமல் அழகர்சாமியும், மாரியம்மாளும் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பாலு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அழகர்சாமியையும், மாரியம்மாளையும் கைது செய்தனர். இருவரும் சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி 1 கோடி ரூபாய்  வரை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.