கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவருடைய வீட்டில் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்துவதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவருடைய மொபைலுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும் மின் கட்டணமாக சுமார் 8.75 லட்சம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய மின்கட்டணத்தை முறையாக சரி செய்து தருமாறு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது.