திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இந்த மையத்தில் போட்டி தேர்வர்கள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக விசாலமான காற்றோட்டம் உள்ள அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் கணினி மையம், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள் படிப்பதற்கு தனி பிரிவு, இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், குழந்தைகள் விளையாட்டு பிரிவு, பாதுகாப்பு தடுப்பு கம்பி, சுகாதார வளாகம் போன்ற அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இது அரசு வேலைவாய்ப்புக்கு செல்லும் போட்டி தேர்வர்களுக்கு இன்றியமையாத ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் கட்டிடங்கள் தரமான முறையில் பணிகளை மேற்கொண்டுநான்கு மாதங்களில் நிறைவு செய்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.