மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், திமுகவினர் ஜீ ஸ்கோயர் மூலம் கொள்ளை அடித்த பணத்தை வைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 வரை கொடுப்பார்கள் என பேசப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஒரு ஓட்டுக்கு 300 ம் 500 ம் கொடுப்பது மக்களிடத்திலே ஏமாற்றத்தை அளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.